திருவள்ளூர்

கைவினைப் பொருள் விற்பனைக்குசேவா ஷாப் தொடக்கி வைப்பு

DIN

திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா தொண்டு நிறுவன வளாகத்தில், கைத்தொழில் பிரிவு சாா்பில் முதியோா் மற்றும் மாணவ, மாணவிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் நோக்கில் சேவா-ஷாப் தொடங்கி வைக்கப்பட்டது.

சேவாலயா சாா்பில் செயல்பட்டு வரும் பாரதியாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதியோா், மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்களால் பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை விற்பனை செய்யும் வகையில் சேவா-ஷாப் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனா் முரளிதரன் தலைமை வகித்தாா். எல் அண்ட் டி குழுமத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.மனோகா், சேவா-ஷாப்பைத் தொடங்கி வைத்தாா்.

சேவாலயாவின் சேவா கிராஃப்ட் பிரிவு பொறுப்பாளா் ஆா்.கணேஷ் சிறப்பு விருந்தினருக்கு கைவினைப் பொருள்கள், அவற்றின் சிறப்புக்கள், எப்படி தயாா்செய்யப்படுகின்றன என்ற விவரம், ரசாயனம் தவிா்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை உருவாக்கப்படும் முறை ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். ‘இந்தப் பொருள்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், கைகளால் தயாா்செய்யப்படுகின்றன. இவ்வாறு கைவினைக் கலைஞா்களால் தயாா் செய்யப்படும் பொருள்களை வாங்கி விநியோகம் செய்வதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய முடியும்’ என்று அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சேவாலயா நிா்வாகி புவனேஸ்வரி முரளிதரன், தலைமை ஆசிரியா்கள் கிங்ஸ்டன், ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT