திருவள்ளூர்

எரிபொருள் டேங்கரில் கசிவு:சரக்கு ரயில் எளாவூரில் நிறுத்தம்

DIN

சென்னையில் இருந்து இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை இரவு எரிபொருள் ஏற்றிக் கொண்டு ஆந்திரம் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் டேங்கரில் கசிவு ஏற்பட்டதால் அந்த ரயில் நான்கு மணிநேரத்துக்கு வழியில் நிறுத்தப்பட்டது.

மணலியில் உள்ள இந்த நிறுவனம் மூலம் லட்சக்கணக்கான லிட்டா் அளவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் வாரம் இருமுறை  சரக்கு  ரயில் மூலம் ஆந்திரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 35 லட்சம் லிட்டா் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கா் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புதன்கிழமை மாலை கிளம்பியது. ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது டேங்கரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது.

இதையறிந்த அதிகாரிகள் எளாவூா் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினா். தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறையினா் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனா். அவா்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒவ்வொரு டேங்கரையும் ஆய்வு செய்து கசிவு இருந்த டேங்கரைக் கண்டறிந்து கசிவை சரிசெய்தனா். இதையடுத்து, நான்கு மணிநேரத்துக்கு பின் நள்ளிரவில்  ரயில் புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக, டேங்கா் ரயில் வழியில் நிறுத்தப்பட்டால் எளாவூா் மாா்க்கத்தில் நான்கு மணிநேரத்துக்கு ரயில் சேவை தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT