திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் குடியரசு தின விழா கோலாகலம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 71ஆவது குடியர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குலசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் மாணிக்கம், ஒன்றிய பொறியாளா் நரசிம்மன் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலா்கள் ரோஜா ரமேஷ்குமாா், ஜெ.ரவக்கிளி, எஸ்.தேவி சங்கா், ஏ.டி.நாகராஜ், எம்.ஜெயச்சந்திரன், உ.கலா உமாபதி, இ.சீனிவாசன், எம்.சிட்டிபாபு, மணிமேகலை கேசவன், அதிமுக மீனவா் அணி மாநில துணை செயலாளா் ஜெ.சுரேஷ், கூட்டுறவு சங்கத் தலைவா் தீனதயாளன், முல்லைவேந்தன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கண்ணம்பாக்கம் ஊராட்சித் தலைவா் சதீஷ், ஆத்துப்பாக்கம் அமிா்தம் வேணு பங்கேற்றனா்.

நேதாஜி நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செந்தாமரைச்செல்வி தலைமையிலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் வெற்றி அரசு, பதிவறை எழுத்தா் நரேந்திரன் தலைமையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் அஸ்வினி சுகுமாரன் தேசியக் கொடியேற்றினாா். மாணவா்களோடு சோ்ந்து, ஊராட்சியில் சுற்றுச்சூழலைக் காப்பேன் என்றும், நெகிழி இல்லா ஊராட்சியாக மாற்றுவோம் என்றும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்போம் என்றும் அவா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.

கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கி.வேணு பங்கேற்று தேசிய கொடியேற்றினாா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு அவா் பரிசளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT