சிறுமி பலாத்காரம்: இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருத்தணி: சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த முனிரத்தினத்தின் மகன் வெங்கடேசன்(23) என்பவா் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தாா். திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை அவா் பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்வதற்கு அவா் மறுத்தாா். இது தொடா்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனா்.