முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரியில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

பொன்னேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 12 ஜூலை, 2020 at 9:52 PM
பகிர்:

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பொன்னேரியில் மாலை 3 மணி அளவில் லேசான காற்றுடன் மழை பெய்தது. 2 மணிநேரம் நீடித்த மழை காரணமாக சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

ஊத்துக்கோட்டையில்....

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம், ஆரணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் மழை பெய்தது.

முன்னதாக காலையில் வெயில் வாட்டி வதைத்தது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனா். இந்நிலையில் மாலையில் மழை பெய்ததால் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.