கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
புதிதாகத் தொடங்கப்பட்ட டிஆர்எஸ் கட்சி குறித்து பாஜக தலைவர் பேசியது தொடர்பாக...
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிதியளிப்பதாக பாஜக தலைவர் என்.வி. சுபாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாதில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய, கவிதா 'தெலங்கானா ராஷ்டிர சேனா' (டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் 2029 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் சனிக்கிழமை (ஏப்.25) அறிவித்தார்.
இதுகுறித்து, பாஜக தலைவர் என்.வி. சுபாஷ் கூறுகையில், ”ஒரு புதிய கட்சியைத் தொடங்குவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
Advertisement
Advertisement
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியிடமிருந்து வாக்குகளைப் பிரிப்பதற்காக, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கு, ரேவந்த் ரெட்டி நிதியுதவி அளித்து வருகிறார். குறிப்பாக நிதி தொடர்பாக, எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவளிக்கிறார்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது மாநிலத்தின் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி விரும்பியது ஒரு சூழ்ச்சி என்றே கூறலாம்.
தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சி தொடங்கப்பட்டதால் எந்த அச்சுறுத்தலோ புதிதாக எதுவும் நடப்பதாகவோ எங்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
BJP leader N.V. Subhash has alleged that Telangana Chief Minister Revanth Reddy is funding the TRS party, which was launched by Kavitha, the daughter of former Telangana Chief Minister Chandrashekar Rao.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.