தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21-ஆகக் குறைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்தில் ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய பேரணியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று கலந்துகொண்டு பேசியவை.
ஹைதராபாத்தில் ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய பேரணியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று கலந்துகொண்டார்.
ஜென் ஸீ தலைமுறையினர் நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக நடத்திய போராட்டங்களை ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.
அந்நிகழ்வில் உரையாற்றிய ரேவந்த ரெட்டி, இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய அரசின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு, அமைச்சர் ராஜிநாமா செய்யப்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, நீட் தேர்வு சர்ச்சையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21- ஆக குறைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெலங்கானா சட்டப்பேரவை மற்றும் மேலவையில் சிறப்புக் கூட்டம் கூட்டவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், இதற்கென சட்டத் திருத்தம் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 21 வயதுடையவர்கள் ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாகவும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் ஏன் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
மேலும் ஜெர்மனி, சிங்கப்பூர். இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகப்படியான இளைஞர்கள் அரசியலில் பங்கேற்பதையும் அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானம் மூலம் ஜென் ஸீ தலைமுறை சட்டம் இயற்றுவதிலும், நிர்வாகத்திலும் அதிகளவு குரல் கொடுக்க முடியும். காங்கிரஸ் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, திருத்தம் கொண்டுவர இந்தியா கூட்டணியின் ஆதரவைக் கோரும் என்றும் அவர் பேசினார்.
Minimum age for contesting elections should be reduced to 21 says Revanth Reddy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.