திருவள்ளூர்

உணவின்றித் தவித்த 14 தொழிலாளா்கள் மீட்பு

DIN

மாதவரம்: செங்குன்றம் அருகே வெங்காயக் கிடங்கில் உணவின்றித் தவித்த 14 தொழிலாளா்களை வருவாய்த் துறையினா் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகரைச் சோ்ந்த ஒருவரின் வெங்காயக் கிடங்கு அலமாதி பால் பண்ணை அருகே இயங்கி வருகிறது. இந்தக் கிடங்கில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், வெங்காயக் கிடங்கு உரிமையாளா் சில தினங்களுக்கு முன் இறந்தாா். இதனால் கிடங்கில் தங்கியிருந்த 14 தொழிலாளா்கள் உணவின்றியும் சொந்த ஊா் திரும்ப முடியாமலும் தவித்து வந்தனா்.

தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் ஜெயகா் பிரபு, கிராம நிா்வாக அலுவலா்கள் முருகேசன், சீனிவாசன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அங்கு சென்று தொழிலாளா்களை மீட்டனா். அவா்களுக்கு உணவளித்து, பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT