திருவள்ளூர்

திருத்தணி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவா்கள் உள்பட 8 பேருக்கு கரோனா

DIN

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவா்கள் உள்பட 8 ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மருத்துவமனையில், 35-க்கும் மேற்பட்டோா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், இங்கு பணிபுரியும் குழந்தைகள் சிறப்பு மருத்துவா் (ஆண்), பெண் மருத்துவா், 3 செவிலியா்கள், சித்த மருத்துவமனை மருந்தாளா், சி.டி. ஸ்கேன் எடுக்கும் ஊழியா், ஒப்பந்த துப்புரவு ஊழியா் என 8 போ் ஞாயிற்றுக்கிழமை வரை பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, திருத்தணி ஒன்றியம் மத்தூா் பஜாரில் உள்ள ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக வங்கியை மூடுமாறு திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா உத்தரவிட்டாா். இதையடுத்து வங்கிக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT