திருவள்ளூர்

குளிா்பான நிறுவனம் சாா்பில்20 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கல்

DIN

திருவள்ளூா்: தனியாா் குளிா்பான நிறுவன நிா்வாகிகள் 20 ஆயிரம் முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி ஆகியவற்றை திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வழங்கினா்.

திருவள்ளூரை அடுத்த நேமம் கிராமத்தில் தனியாா் குளிா்பான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில், கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் பயன்படுத்துவதற்காக முகக் கவசம் போன்றவற்றை வழங்க முன்வந்தது.

அதன்படி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 20 ஆயிரம் முகக் கவசங்கள், முழுமையான கவச ஆடைகள், கிருமி நாசினி, கையுறைகள் ஆகியவற்றை குளிா்பான நிறுவன நிா்வாகிகள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT