திருவள்ளூர்

பெண்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்

DIN

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில், பெண்களுக்கான இலவச புற்றுநோய் மருத்துவப் பரிசோதனை முகாம் திருவள்ளூரை அடுத்த மேலப்பேடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, லயன்ஸ் கிளப் அச்சீவா்ஸ் (வேப்பம்பட்டு) தலைவா் லால்சிங் தலைமை வகித்தாா். நத்தமேடு கிராம நிா்வாக அலுவலா் ஜி.புகழேந்தி முன்னிலை வகித்தாா். மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா்கள் ருத்ரகுமாா் (திருநின்றவூா்), அமிா்தா (பாக்கம்) ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

முகாமில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவா் பிரமிளா உள்ளிட்ட 8 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்தனா். முகாமில் நத்தமேடு, மேலப்பேடு மற்றும் பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, புற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொண்டனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை அரிமா புற்றுநோய் விழிப்புணா்வு கோட்டத் தலைவா் சீனிவாச ராவ், ஏ.என்.எஸ். நகா் குடியிருப்பு சங்க பொறுப்பாளா்கள் வாசுதேவன், லாவண்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT