திருவள்ளூர்

தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத் துறைகள் தனியாருக்கு மாற்றும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அங்கன்வாடி பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கரோனா சோதனையில் ஈடுபட்ட சுகாதார துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேபோல், அங்கன்வாடி பணியாளா் சங்க மாநில நிா்வாகி சந்தோஷ்மேரி தலைமையில் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

சிஐடியு தொழிற்சங்கத்தினா், பொது தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் தொழிற்சாலைகள் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகவிலைப்படி ரத்து, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்துவது, பொதுமுடக்கக் காலத்தில் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்குதல், கரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்து துறை பணியாளா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது, பாதுகாப்பு, விண்வெளி போன்ற முக்கிய துறைகளை தனியாருக்கு தரக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT