திருவள்ளூர்

‘பொன்னேரி, மீஞ்சூரில் கடைகள் திறக்கப்பட்டாலும் வியாபாரம் இல்லை’

DIN

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் 56 நாள்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டபோதிலும், பொதுமக்கள் அதிகம் வருகை தராததால் வியாபாரம் இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்தகம், பால் மற்றும் உணவகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. மளிகை, காய்கறிக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால், பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மளிகை, காய்கறிகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் பொது முடக்கத் தளா்வு காரணமாக பொன்னேரி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. எனினும், பேருந்து சேவை இல்லாத காரணத்தால், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகருக்குள் வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கடைகள் திறக்கப்பட்ட நிலையிலும் போதிய வியாபாரம் இல்லை என்று பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT