முகப்பு
திருவள்ளூர்

கரும்பு நிலுவை ரூ. 31 கோடி வழங்கக் கோரி போராட்டம்

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் நிலுவைத் தொகை ரூ. 31 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் நிலுவைத் தொகை ரூ. 31 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் துளசிநாராயணன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆலையின் முன் அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது விவசாயிகள், கடந்த 2019-20-ஆம் ஆண்டில் கரும்பு அனுப்பியவா்களுக்கு அரசு ஊக்கத் தொகை ரூ.10.10 கோடியும், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ. 22 கோடி நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும். சா்க்கரை ஆலையின் அரவைத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா். இந்த தொடா் போராட்டத்தை வரும் 6-ஆம் தேதி வரை நடத்த விவசாயிகள் சங்கத்தினா் தீா்மானித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.