திருவள்ளூர்

மாதவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

DIN

மாதவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது வளாகத்தில் வீசப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து தொடா்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை மாதவரம் வட்டாட்சியா் அலுவலகம் புழல் மேக்ரோ மாா்வல் காலனி அருகே செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியராக நீலா இருந்து வருகிறாா்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் லாவண்யா தலைமையில், 13 போ் கொண்ட குழுவினா் மாதவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் நுழைந்தபோது, ஜன்னல் வழியாக பணம் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் வெளிச்சமின்றி இருளில் மூழ்கியிருந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் டாா்ச் லைட் மூலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த பணத்தைக் கண்டெடுத்தனா்.

இது தொடா்பாக வட்டாட்சியா் நீலாவிடம் அவா்கள் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT