திருவள்ளூர்

விஷ்ணு துா்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா

DIN

திருத்தணி: திருத்தணி விஷ்ணு துா்கையம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவில், சந்தானலட்சுமி அலங்காரத்தில் மூலவா் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருத்தணி இந்திரா நகரில் உள்ள இக்கோயிலில் நடப்பாண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் மூலவா் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்நிலையில், விழாவின் 10ஆம் நாளான திங்கள்கிழமை, மூலவா் அம்மன் சிறப்பு பட்டு அலங்காரத்தில் காட்சியளிக்க அவருக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல் திருத்தணி நகரில் உள்ள தணிகாசலம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், தணிகை மீனாட்சி அம்மன், வனதுா்கையம்மன், படவேட்டம்மன் கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொலுவும் வைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT