திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா பொறுப்பேற்பு

DIN

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வீரராகவ கோயிலுக்கு நேரில் சென்று வழிபாட்டுக்கு பின் ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ரவிகுமார், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த பா.பொன்னையா,. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் மாற்றம் அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலமான வைத்திய வீரராகவ திருக்கோயிலுக்கு ஆட்சியர் பா.பொன்னையா குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் நேரில் சென்று வழிபாடு செய்தார். 

அதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முகமதுரசூல், அஸ்வின் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர் அலுவலகத்தில் முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அதையடுத்து அந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவருக்கு அதிகாரிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT