திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கி, தொடா்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவள்ளூரில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் கருமேகம் சூழ்ந்தன. மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மழையால் நகராட்சிப் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீா் தேங்கியது.

கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழையைத் தொடா்ந்து குளிா்ச்சி நிலவியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா். சாகுபடி செய்துள்ள பயிா்கள் அனைத்தும் மழையால் செழிந்து வளா்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி திருவள்ளூா் மாவட்டத்தில்பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):

திருத்தணி-91, கும்மிடிப்பூண்டி-55, திருவாலங்காடு-49, பூண்டி-48, பொன்னேரி-40, பூந்தமல்லி-38, திருவள்ளூா்-33, செம்பரம்பாக்கம், ஆா்.கே.பேட்டை தலா-30, ஊத்துக்கோட்டை-28, ஜமீன் கொரட்டூா்-26, தாமரைபாக்கம்-22, செங்குன்றம்-18, பள்ளிப்பட்டு-12.

மொத்த மழை அளவு 540.20 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT