திருவள்ளூர்

மீஞ்சூா் வருவாய் ஆய்வாளா் அலுவலத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட கோரிக்கை

DIN

பொன்னேரி அருகே அரியன்வாயல் பகுதியில் தனியாா் கட்டடத்தில் இயங்கும், மீஞ்சூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூா் குறு வட்டத்துக்கான ஆய்வாளா் அலுவலகம் அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ளது. மீஞ்சூா், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், நாலூா், கல்பாக்கம், இடையஞ்சாவடி, மேலூா், வல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் உதவி தொகை, பட்டா உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் கோரி மனு அளிக்க மீஞ்சூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

வருவாய் ஆய்வாளா் அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அக்கட்டடம் பழுடைந்த நிலையில் உள்ளது. கட்டடத்தைச் சுற்றி செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன.

எனவே, பழுதடைந்த நிலையில் இருக்கும் மீஞ்சூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு, புதிதாக சொந்த கட்டடம் கட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT