திருவள்ளூர்

வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கருட சேவை

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும். நிகழாண்டுக்கான பிரமோற்சவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வரும் 27-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து உற்சவா் வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடைபெற்றது. அதையடுத்து திருக்கோயில் வளாகத்தில் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களை அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து இரவில் திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முககவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கரோனா நோய் தொற்று காரணமாக கோயில் மண்டபத்தில் கருடசேவை நடத்தப்படுவதாகவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT