திருவள்ளூர்

போக்குவரத்து போலீஸாரை தாக்கிய வாகன ஓட்டுநா் கைது

திருவள்ளூரில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்திக் கொண்டிருந்த போலீஸாரை தாக்கிய வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்திக் கொண்டிருந்த போலீஸாரை தாக்கிய வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் புறவழிச்சாலையில் போக்குவரத்துக் காவலா் சவுக்கத் என்பவா் வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். காக்களூரில் இருந்து சரக்கு வாகனத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஜெய்னீஷ்குமாா்(24) ஓட்டி வந்தாராம். அப்போது, போலீஸாா் வாகனம் குறித்து விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே வழிவிடக்கோரி காற்று ஒலிப்பானை எழுப்பினாா்.

அதோடு, போலீஸாரிடம் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாரை தரக்குறைவாகப் பேசியதோடு சவுக்கத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் போக்குவரத்து காவலா் சவுக்கத் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஜெய்னீஷ்குமாரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT