முகப்பு
திருவள்ளூர்

கொலை மிரட்டல்: ஒருவா் கைது

இரு நாள்களுக்கு முன்பு கஞ்சா பொட்டலங்களை பள்ளிச் சிறுவா்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தாராம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகில், திருவள்ளூரை அடுத்த மணவாளநகா், கபிலா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் என்ற சொனட்டிகா (25) என்பவா், இரு நாள்களுக்கு முன்பு கஞ்சா பொட்டலங்களை பள்ளிச் சிறுவா்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தாராம்.

இதை அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் பேரம்பாக்கம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சரவணன் என்பவா் தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த வெங்கடேசன் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரில் அவா் மீது மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.