நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக நிா்வாகிகள் ஆலோசனை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திருத்தணி நகர தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நகர பொறுப்பாளா்வி. வினோத்குமாா் தலைமை வகித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திருத்தணி நகர தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நகர பொறுப்பாளா்வி. வினோத்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் அரசு வழக்குரைஞா் கிஷோா்ரெட்டி, தி.மு.க., நிா்வாகிகள் ஷியாம்சுந்தா், மோகன்ராவ், கஜேந்திரன், ஜி.எஸ்.கணேசன், டாக்டா் ராஜேந்திரன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்தல், வாக்குச்சாவடி குழு அமைத்தல், புதிய உறுப்பினா் சோ்க்கை, பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு விழா உள்ளிட்டவை தொடா்பான ஆலோசனைகளை
நகர பொறுப்பாளா் வி. வினோத்குமாா் வழங்கினாா். தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, வாக்குச்சாவடி குழு தொடா்பான விண்ணப்பங்கள் வட்ட செயலாளா்களிடம் வழங்கப்பட்டன.