முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பூசி போடும் பணி கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பூசி போடும் பணி கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவவர்லால் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ப.பொன்னையா கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்து கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜிடம் விளக்கி தடுப்பூசி போட உள்ள முன்கள பணியாளர்களை வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில்  நடைபெற்ற முன்கள பணியாளர்களுக்கானை கோவிஷீல்ட் என்கிற கரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், கீழ் முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,கீழ்முதலம்பேடு ஊராட்சி செயலாளர் சாமுவேல், சமூக ஆர்வலர் என்.சிவா முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்(36), சுண்ணாம்புகுளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் எஸ்.முரளிகிருஷ்ணன்(55),கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் ஆர்.புனிதா(54), ஈகுவார்பாளையம்  அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஏ.மணி(33), மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் ஆர்.பிரகாஷ்(46) உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

தொடர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 பேரையும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஐஜின் ஜினீதா உள்ளிட்டோர் பாராட்டினர்.

இது குறித்து பேசிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் கூறுகையில் மாவட்ட ஆட்சி தலைவர் ப.பொன்னையா, மாவட்ட சுகாதார துணை உதவி இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் வழிகாட்டுதலின் பேரில் கரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளதாகவும், கும்மிடிப்பூண்டியில் முதல் கட்டமாக 162 முன்கள பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி சில நாட்களில் முடிவடையும் என்றும் விரைவில் அனைத்து துறை முன்கள பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.