திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே சுதாகரன், இளவரசியின் 41.22 ஏக்கா் அரசுடைமை

DIN

ஊத்துக்கோட்டை: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கின் 2017-ஆம் ஆண்டு இறுதி தீா்ப்பின்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசியின் சொத்துகள் 41.22 ஏக்கா் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

சசிகலாவின் உறவினா்களுக்குச் சொந்தமான சொத்துகள் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த வேலகாபுரம் கிராமத்தில் தனியாா் நிறுவனம் பெயரில் 1995-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு செய்துள்ள 41.22 ஏக்கா் புன்செய் நிலம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா். வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோா் பெயா்களில் 1995-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யப்பட்ட புன்செய் நிலம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலம் தமிழக அரசுக்குச் சொந்தமானது எனவும், அந்த இடத்திலிருந்து வரும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தம் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT