திருவள்ளூர்

மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டோருக்கு அரசு அடையாள அட்டை வழங்கக் கோரி, கடந்த ஓராண்டாக ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் ஆட்சியா் உறுதியளித்திருந்தாா். அதன்படி, மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆட்சியா் பா.பொன்னையாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்தாா்.

நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT