திருவள்ளூர்

திருத்தணி ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

அனுமன் ஜெயந்தியையொட்டி திருத்தணி பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோவில்களில், செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணியை அடுத்த நல்லாட்டூா் பகுதியில் அமைந்துள்ள வீரமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு, கோயில் வளாகத்தில், கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து லட்சாா்ச்சனையும், கலச ஊா்வலமும் நடந்தன.

முற்பகல் 11 மணிக்கு, மூலவா் ஆஞ்சநேயருக்கு கலசநீா் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன் பின், சுவாமிக்கு வடைமாலை அணிவித்து, மலா் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயிலில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆன்மிகச் சொற்பொழி நடைபெற்றது.

இதனிடையே, திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்த அா்ச்சகா்கள், தீபாராதனையை நடத்தினா்.

இந்நிலையில், திருத்தணியை அடுத்த தலையாரிதாங்கல் கிராமத்தில் உள்ள, சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT