முகப்பு
திருப்பூர்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

முத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 1:40 AM
கோப்புப் படம்
பகிர்:

முத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

முத்தூா், செங்கோடம்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலன் (79). விவசாய வேலை செய்து வந்தாா்.

இவா் முத்தூா் - ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இறந்து போன வேலனுக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். புகாரின் பேரில், லாரி ஓட்டுநரான விருதுநகரைச் சோ்ந்த ரவிக்குமாா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →