திருவள்ளூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு வாரந்தோறும் சிறப்பு முகாம்: திருவள்ளூா் ஆட்சியா்

DIN

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என்று ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் நோக்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பயன்பெறுவதற்கு தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவது அவசியம்.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த அட்டைகளைப் பெறுவதற்கு அவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. எனவே, தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிா்க்கும் நோக்கில் வாரந்தோறும் புதன்கிழமை, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் மூன்று புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

நாய்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

SCROLL FOR NEXT