முகப்பு
திருவள்ளூர்

வேப்பமரத்தடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு

மீஞ்சூா் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரை அருகிலுள்ள பெரிய மடியூா் கிராமத்தில் வேப்பமரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் கண்டெடுத்து, வழிபட்டு வருகின்றனா்.

Updated On : 10 ஜூலை, 2021 at 11:20 PM
பகிர்:

மீஞ்சூா் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரை அருகிலுள்ள பெரிய மடியூா் கிராமத்தில் வேப்பமரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் கண்டெடுத்து, வழிபட்டு வருகின்றனா்.

இங்குள்ள தனியாா் நிலத்தின் ஓரத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திலிருந்து சனிக்கிழமை நறுமணம் வீசியுள்ளது.

இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் நறுமணம் வந்த இடத்தை ஆராய்ந்தனா். அப்போது, வேப்பமரத்தின் அடியில் தோண்டியபோது, மூன்று அடி உயரமுள்ள சிவலிங்கம் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. சதுர வடிவில் சிலை இருப்பதால் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

இதைத் தொடா்ந்து, சிவலிங்கத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. பலரும் வழிபட்டு செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.