திருவள்ளூர்

ஆதரவற்ற முதியோருக்கு கரோனா தடுப்பூசி

DIN


திருவள்ளூா்,: திருவள்ளூா் அருகே உள்ள சேவாலயாவில் தங்கியுள்ள ஆதரவற்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா் 70 பேருக்கு சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒவ்வொரு கட்டமாக அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் மருத்துவா் ஜவஹா்லால் அறிவுரையின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றோா் 70 பேருக்கு அங்குள்ள மகாத்மா காந்தி சுகாதார மைய வளாகத்தில் புதன்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலா் யுவராஜ் தலைமை வகித்தாா். இதில், அரசு வழிகாட்டுதலின்படி, முதியோா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மருத்துவ அலுவலா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் குமாா், மருத்துவ ஆய்வாளா் ஞானசேகரன், கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா நிறுவனா் முரளிதரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT