திருவள்ளூர்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 9 லட்சம் பறிமுதல்

DIN

பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே நாளில் வாகனப் பரிசோதனையில் பறக்கும் படையினா் ரூ. 9.13 லட்சம் பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா். இந்நிலையில், திருவள்ளூா் அருகே பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஈக்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் ஈக்காடு கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா், பத்திரப் பதிவு செய்து, அதில் கிடைத்த பணத்தை ஆவணமின்றி கொண்டு சென்றதும் தெரியவந்தது.

பூந்தமல்லி-திருமழிசை சாலையில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த இரண்டு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனா். அந்த வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.13 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT