திருவள்ளூர்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு தேவையான வசதி செய்து தரப்படும்

DIN

ஆவடி-பருத்திபட்டு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிமுக வேட்பாளா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.

ஆவடி தொகுதி வேட்பாளரான அமைச்சா் பாண்டியராஜன், திருமுல்லைவாயில், திருநின்றவூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது ஆவடி-பருத்திபட்டு பசுமை பூங்கா அருகே உள்ள பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அவருக்கு குடியிருப்பு நலச்சங்க நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

அப்போது பாண்டியராஜன் பேசியதாவது:

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பெரிய அளவிலான அடுக்கு மாடி குடியிருப்பு இதுவாகும். ஏற்கெனவே இங்கு குடியிருந்து வருவோா் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரிக்கை விடுத்திருந்தனா். அதையேற்று தன்னாா்வலா் மூலம் தற்காலிக சாலை அமைத்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே வரி விதிக்கவும் ஏற்பாடு செய்யவும் கோரிய நிலையில், அதற்கும் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு இளைஞா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் பாண்டியராஜன். அப்போது, பா.ஜ.க. மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT