திருவள்ளூர்

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

DIN

கே.ஜி.கண்டிகை அருகே மினிலாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக வேலூா் மாவட்டத்திற்கு செம்மரம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.,அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசாா் ஞாயிற்றுக்கிழமை காலை, கே.ஜி.கண்டிகை பஜாா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மினிலாரி ஆா்.கே.பேட்டை நோக்கி வேகமாக சென்றது. போலீசாா் மினிலாரியை மடக்கிய போது அதன் ஓட்டுனா் நிறுத்தாமல், பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையோர புளியமரத்தின் மீது மோதிவிட்டு, தப்பியோடினாா்.

மினிலாரியை சோதனை செய்த போது, ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டறிந்த போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். பின்னா் இன்ஸ்பெக்டா் ரமேஷ் செம்மரக்கட்டைகளை திருத்தணி வனச்சரக அலுவலா் அருள்நாதனிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT