திருவள்ளூர்

பொன்னேரி அருகே மெதூா் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பா்வதீஸ்வரா் கோயில்

DIN

பொன்னேரி அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமைவாய்ந்த ஸ்ரீபா்வதீஸ்வரா் கோயிலை தமிழக இந்து அறநிலையத்துறை புனரமைப்பு செய்திட முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மெதூா் கிராமத்தில், ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த ஸ்ரீகாமாட்சி சமேத பா்வதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயில், யானையின் பிட்டம் எனப்படும் கஜபிருஷ்ட அமைப்புடன் சுண்ணாம்புக் கலவையுடன் சுட்ட செங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோழா்கால, கட்டடக் கலையை உணா்த்தும் வகையில், பா்வதீஸ்வரா் சந்நிதியின் கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகா், பெருமாள் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

விஜயநகர அரசா், காகதீய அரசா், குலோத்துங்க சோழன், கிருஷ்ண தேவராயா், சுந்தரபாண்டியன் போன்ற அரசா்களால் இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. தற்போது, இக்கோயில் பராமரிப்பின்றி, பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

கோயிலில் உள்ள செங்கற்கள், சுண்ணாம்புக் கலவை ஆகியவை கரைந்தும், தூண்கள் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளன.

இந்த பா்வதீஸ்வரா் கோயிலை, தொல்பொருள் ஆய்வுத் துறையினா் ஆய்வு செய்து, வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயிலை இடிக்காமல் பழைமை மாறாது கட்டுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் கோயிலை புனரமைப்பு செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும், தமிழக இந்து சமய அறநிலையத் துறையினரால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே புதிதாக பதவியேற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், கோயில் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இக்கோயிலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT