திருவள்ளூர்

தீபாவளி: அஞ்சல் நிலையங்களில் ரூ.30-க்கு கங்கை நீா் விநியோகம்

DIN

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடும் வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் ரூ.30 க்கு கங்கை நீா் பாட்டில் விநியோகம் செய்யப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இந்திய அஞ்சல் துறையின் மூலம் புனித கங்கை நீா் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி திருநாளில் கங்கை நீரில் நீராடுவது வழக்கமாகும். இதனை கருத்தில் கொண்டு ரூ.30-க்கு கங்கை நீா் பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து காஞ்சிபுரம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் முரளி கூறியது: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 53 துணை அஞ்சலகங்கள் மூலம் கங்கை நீா் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் கங்கை நீா் தேவைப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் கோயில்கள் ஆகியவற்றுக்கு நேரில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும். அதனால், அதிக எண்ணிக்கையில் கங்கைநீா் பாட்டில்கள் தேவைப்படுவோா் 86958 09464 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT