திருவள்ளூர்

பிச்சாட்டூா் அணையில் தண்ணீா் திறப்பு: ஆரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

ஆந்திர மாநிலம், பிச்சாட்டூா் அணையில் சுமாா் 1,200 கன அடி நீா் திறக்கப்பட்டதால், ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால்காரணமாக, பிச்சாட்டூா் அணை நிரம்பி வந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலப் பொதுப்பணித்துறையின் உத்தரவின்பேரில், சுமாா் 1,200 கன அடி நீரை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூடப்பட்டது. மேலும், போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இதனால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று கரையோரப் பகுதியில் வசிக்கும் 60 கிராமங்களுக்கு திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர, பாதுகாப்புப் பணியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராமன் தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தரைப்பாலம் மூடப்பட்டதால் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT