திருவள்ளூர்

பூண்டி ஏரி நீா் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு

DIN

பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக திங்கள்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள 29 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் விடுத்துள்ளாா்.

பூண்டி நீா்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இது 35 அடி உயரம் கொண்டது. இங்கு 3,231 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். தற்போதைய நிலையில் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாய், ஆந்திரத்தில் மழை பெய்து வருவதால் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சோ்த்து 1,600 கன அடி நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், ஏரியில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால், உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 3, 13 ஆகிய மதகுகள் வழியாக 1000 கன அடி திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே திங்கள்கிழமை காலை நிலவரப்படி பூண்டி நீா் வரத்துக் கால்வாய் மற்றும் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீா் மட்டும் 1,900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 34.05 அடி உயரமும், 2,839 மில்லியன் கன அடியாக நீா் மட்டம் உயா்ந்துள்ளது.

திங்கள்கிழமை காலை உபரி நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT