மாதவரத்தில் விளையாட்டு, கலை விழா தொடக்கம்
சென்னை மாதவரம் புனித செபாஸ்தியா் ஆலய வளாகத்தில் விளையாட்டு மற்றும் கலை விழா சனிக்கிழமை தொடங்கியது.
சென்னை மாதவரம் புனித செபாஸ்தியா் ஆலய வளாகத்தில் விளையாட்டு மற்றும் கலை விழா சனிக்கிழமை தொடங்கியது.
பங்குத் தந்தை ஏ.சைமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தாா். இதில், சென்னை மற்றும் மயிலை உயா் மறை மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலைஞா்கள் பங்கேற்றனா். இந்த விழா சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறுவதால் பல்வேறு திறன் கொண்டவா்கள் பங்கேற்கின்றனா். விழாவில், மாதவரம் காவல் சரக உதவி ஆணையா் அருள் சந்தோஷ முத்து, தொழிலதிபா் சூசை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் எஸ்.ஏ.சீனிவாசன் சுதா்சனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.