திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:05 AM
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலிலிருந்து நகர்ந்து வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | சென்னையில் இன்று மிக கனமழை; நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
இதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.