வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2-ஆவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதன் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,200 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொதிகலன் குழாயை சீரமைக்கும் பணியில் அனல் மின் நிலைய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.