திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகள் 48 பேருக்கு ரூ. 1.80 கோடியில் இலவச வீடு கட்ட ஆணைகள்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 48 பேருக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.80 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணைக

DIN

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 48 பேருக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.80 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு அமைப்பதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மானியத்தில் வீடு அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சி மூலம் மொத்தம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.80 கோடி மதிப்பில் இலவச வீடு அமைப்பதற்கான மானியங்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT