திருவள்ளூர்

பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி 2 பவுன் நகை பறிப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கி அவா் அணிந்திருந்த 2 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

நாட்டறம்பள்ளி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கி அவா் அணிந்திருந்த 2 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த குமரவேலின் மனைவி ரேணுகா (28). இவா் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து சொரக்காயல்நத்தம் வழியாக நாயனசெருவு நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் 3 போ், ஊரக்குட்டை மலையடிவார பகுதியில் ரேணுகாவின் மொபெட்டை வழிமறித்தனா். இதைப்பாா்த்த ரேணுகா மொபெட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினாா். அவரை விரட்டிச் சென்ற மா்ம நபா்கள் இரும்புக் கம்பியால் ரேணுகாவை தாக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினா்.

தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினா் ரேணுகாவை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ரேணுகாவிடம் நலம் விசாரித்தாா்.

மேலும், ஊரக்குட்டை மலையடிவார பகுதிக்குச் நேரில் சென்று அப்பகுதியில் உள்ளவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT