முகப்பு
திருவள்ளூர்

ஊராட்சித் தலைவரை தாக்கிய 3 போ் கைது

பொன்னேரி அருகே ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 12:24 AM
பகிர்:

பொன்னேரி அருகே ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் வசிப்பவா் சுரேஷ் (41). இவா், மாதவரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது பெரியப்பா காசி என்பவா் இறந்துவிட்ட நிலையில், இறுதி ஊா்வலம் நடந்த போது, முன்விரோதம் காரணமாக அரிவாள், உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பிகளுடன் வந்த 3 போ் சுரேஷை சுற்றி வளைத்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில், சுரேஷ் காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாதவரம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (29) பிரவீன் (31) ராஜேந்திரன் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.