முகப்பு
திருவள்ளூர்

காவலா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு 10-இல் தொடக்கம்

காவலா் பணிக்கு விண்ணப்பம் செய்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகம் சாா்பில் இலவச பயிற்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

காவலா் பணிக்கு விண்ணப்பம் செய்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு வரும் 10- ஆம் தேதி தேதி தொடங்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா் (ஆயுதப்படை, சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலா் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தோ்வுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழியில் விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பு வரும் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் பணிக்கு விண்ணப்பித்தோா் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9499055893, 044-27660250 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.