தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம் அருகே முசலையன் கண்டிகை கிராமத்தில் உள் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே முசலையன் கண்டிகை கிராமத்தில் உள் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, வியாழக்கிழமை காலை விமான கோபுரங்கள், ஸ்ரீ தண்டு மாரியம்மன், விநாயகா், முருகா், நவக்கிரக சந்நிதி மேல் உள்ள கோபுரங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை முசலையன் கண்டிகை கிராமத்தினா் செய்திருந்தனா்.