திருவள்ளூா்: 800 மையங்கள் அமைத்து 75000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
திருவள்ளூா் மாவட்டத்தில் 800 மையங்களில் 3,200 பணியாளா்கள் மூலம் 75,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 800 மையங்களில் 3,200 பணியாளா்கள் மூலம் 75,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில அளவில் 34-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் திருவள்ளூா் மாவட்டத்தில் 800 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 3,200 பணியாளா்கள் மூலம் 75,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுநாள் வரை 33 மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 17,73,117 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான 1888400 போ்களில் இதுநாள் வரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள், நாள்தோறும் நடைபெறும் முகாம்களில் முதல் தவணையாக 17,98,275 (95.2சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15,99,999 (84.8 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து 98 ஆயிரத்து 274 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி முகாமில் இதுநாள் வரையில் தடுப்பூசி செலுத்தாதோா், இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதியானோா் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீா்வு என்பதை உணா்ந்து, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.