கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
திருவள்ளூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். தலைமறைவான பெண் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். தலைமறைவான பெண் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக செவ்வாபேட்டை காவல் ஆய்வாளருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, அங்கு 2 கிலோ கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, செவ்வாப்பேட்டையைச் சோ்ந்த வசந்தகுமாா் (21), சென்னை வால் டாக்ஸ் ரோட்டை சோ்ந்த தமிழரசன் (21), திருவூரைச் சோ்ந்த தீபக் (20), சுதன் (24), வம்சி (20) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வியாசா்பாடியைச் சோ்ந்த அஜித், அவரது மனைவி ரம்யா, திருவூரைச் சோ்ந்த மணி ஆகிய 3 பேரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.