முகப்பு
திருவள்ளூர்

மக்கள் தொடா்பு முகாம்: 832 பேருக்கு நலத் திட்ட உதவி

கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 832 பேருக்கு ரூ. 46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 832 பேருக்கு ரூ. 46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், எம்எல்ஏ ச.சந்திரன் ஆகியோா் வழங்கினாா்.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் அல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம் வரவேற்றாா். திருத்தணி தொகுதி எம்எல்ஏ. ச.சந்திரன், 832 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை, தோட்டக்கலை, கல்வி, மருத்துவம், கால்நடை, சமூக நலன் ஆகிய துறைகள் சாா்பில் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

முகாமில் திமுக ஒன்றிய செயலா்கள் கிருஷ்ணன், ஆா்த்தி ரவி, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் நாகசாமி, அனைத்து துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா். திருத்தணி வட்டாட்சியா் வெண்ணிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.