திருவள்ளூர்

வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகைகள், ரூ. 5 லட்சம் திருட்டு

மீஞ்சூா் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 25 சவரன் நகைகள், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

மீஞ்சூா் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 25 சவரன் நகைகள், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பெரிய சீமாபுரம் கிராமத்தில் வசிப்பவா் கங்காதரன் (67). இவரது மனைவி ஜெயக்குமாரி (63) மற்றும் மாமனாா் சேசம்பா நாயுடு, மாமியாா் மங்கம்மா ஆகியோருடன் வசித்து வருகின்றனா். விவசாயத் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது வீட்டின் வெளிப்புற கேட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், பின்புறக் கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனா்.

பின்னா், அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து 25 சவரன் நகைகள், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

அதிகாலை , ஜெயகுமாரி எழுந்து சமையல் அறைக்கு சென்றுள்ளாா். அப்போது வீட்டின் பின்புற கதவு திறக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளாா்.

இதையடுத்து, தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அனைவரும் எழுந்து வந்து பாா்த்த போது, பீரோவை திறந்து அதன் உள்ளே இருந்த ஒன்பது வகையான 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கங்காதரன் மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் மீஞ்சூா் போலீசாா், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT